தமிழ் மொழி பேசும் ஒயிலாட்டம்!!!

தவிலுமிங்கே  நல்லநல்ல தாளங்கள கொட்டுது
சலங்கைகளும் கரண்டையில ஓசைகள வெட்டுது
வண்ண வண்ண துணியுமிங்கே காத்துலதான் வீசுது
முப்பாட்டன் முருகன் கதையகூட பாட்டாவே பேசுது
இதுதான் எங்க ஒயிலாட்டம்
தமிழ் மொழி பேசும் ஒயிலாட்டம்

எத்தனையோ ஆட்டமெல்லாம் எங்கிருந்தோ வந்தது
எங்க ஆட்டத்தோட ஈடுகட்ட முடியாம நின்னுது
மதுரையில பிறந்ததாக வரலாறு எழுதுது
பல மேடைகளில் உலகமெல்லாம் கதைகளையும் சொல்லுது
இதுதான் எங்க ஒயிலாட்டம்
தமிழ் மொழி பேசும் ஒயிலாட்டம்

பாண்டியனும் சோழனும் பாலூட்டி வளத்தது
ஊரூரா அலஞ்சுதிரிஞ்சு ஆடிபாடி பிழைச்சுது
அண்டத்தையே ஆட்டம் போடவைக்கும் பாட்ட கேளுடா
அந்த நாட்டியங்கள் வந்தபின்னும் இதுக்கீடு இங்க ஏதுடா???
இதுதான் எங்க ஒயிலாட்டம்
தமிழ் மொழி பேசும் ஒயிலாட்டம்

-சந்தோஷ் மாதேவன்
சென்னை, ஏப்ரல் 26, 2017.

ஒயிலாட்டம் பற்றிய ஓர் விழாவில் அந்தத் தமிழ்க் கலையைச் சிறப்பிக்க வேண்டி பாடுவதற்காக, சகோதரர் கார்த்தி பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளுக்கிணங்க நான் இயற்றியது. சொல், பொருள் குற்றங்கள் இருப்பின் பொருத்துக் கொள்க. ஏனெனில் நேரமின்மையால் ஒரு சில மணித்துளிகளில் இயற்றிய பா இது.

Advertisements

Author: The Judgemental Journalist

Journalist, Writer, Blogger, Humourist and Critic

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s