மாற்றங்கள்… தடுமாற்றங்கள்… ஏமாற்றங்கள்….

சிந்தனைக்குள் சிற்பம் ஒன்றைச் செதுக்கினேன்
  சிரமங்கள் பலகடந்து உருவங் கொடுத்தேன்…

தடைகள் பல வந்து அதைச் சிதைக்கமுயல
  தட்டுத் தடுமாறினேன்; திணறினேன்

தடுமாற்றங்கள் என்னை ஆட்டிப் படைக்க
  கைகள் நழுவி உளியினைத் தொலைத்தேன்

முடிவுறாத சிற்பத்தை நிதமும் கண்டழுதேன்
  புலம்பினேன்; கருத்தின் நிலையிழந்தேன்

சட்டென்று கண்விழித்தேன்; மெய்யுணர்ந்தேன்
  விழுந்தது உளிதானே; உயிரல்லவே

தடுமாற்றங்கள் வெறும் மாற்றங்கள் தானே
  ஏமாற்றங்கள் அல்லவே

மண்டியிட்டேன்; தேடினேன்; உளியைக் கண்டெடுத்தேன்
  சிற்பத்தைச்  செதுக்கி முடித்தேன்…..

Advertisements

அதிர்ஷ்டத்தைத் தவறவிடுகிறோம்!!!

நேற்று கல்லூரி விட்டு வீடு திரும்பியவுடன் சற்று இளைப்பாற தொலைக்காட்சி நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மாற்றிப்பார்துக்கொண்டிருந்தன். அப்போது ஒரு தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. பொதுவாக சனி மற்றும் ஞாயிறு மாலை வேளைகளில் திரைப்படங்களை ஒளிபரப்பி நம் நேரத்தை எடுத்துக்கொள்ளும் தொலைக்காட்சி, நேற்றும் என் நேரத்தைப்  பறித்துக்கொண்டது.

உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தல, தளபதி, என்று ஒரு பெரிய ஆதிக்க வரம்பிற்குள் மாட்டிகொண்டிருக்கும் திரை உலகம் எத்தனை  நல்ல நடிகர்களையும் கலைஞர்களையும் தொலைத்திருக்கிறது என்று அந்த படத்தை பார்த்து மீண்டும் ஒருமுறை வருந்தினேன்.

அந்த திரைப்படத்தில் நடித்த கதை நாயகி ஏற்கனவே “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் நாயகியாக நடித்திருந்த காயத்ரி தான்.

நான் பார்த்த முதல் காட்சியிலேயே அந்த திரைப்படம் என்னைப் பெரிதாகக் கவர்ந்துவிட்டது. வெறும் நடிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே பங்குபெற்றிருக்கும் ஒரு காட்சியை, வெகு நாட்களுக்குப் பிறகு நான் பார்த்த்தேன். கீதா, சித்தாரா, இளவரசு, கிட்டி, என ஒரு குணசித்திர நடிகர் பட்டாளமே அந்த படித்தில் நடித்திருந்தனர். அதுபோக புதுமுக நாயகன் ஜெயன், அபாரமாக ஒரு எதார்த்தத்தை வெளிப்படுத்தினார். நாயகி காயத்ரி சோகமாகவே பல காட்சிகளில் தோன்றினாலும் பாத்திரத்துக்கு பொருந்தும் வேலையே செய்துள்ளார். பாவம் ஆனால் இருவரும் இப்போது எங்கே இருக்கிறாகள் என்று திரையுலகதிற்குதன் தெரியும்.

ஒளிப்பதிவாளர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவரை ஒளிப்பதிவாளர் என்றழைப்பதை விட கலைப்பதிவாளர் என்றே அழைக்கவேண்டும். தன் படபிடிப்புக்கருவியை எப்படியெல்லாம் பயன்படுதமுடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்தியுள்ளார். நிச்சயமாக ஒரு பெரிய திறமைசாலியை தவறவிட்டிருக்கிறோம்.

இயக்குநர் பலவித வித்தியாசமான நிகழ்வுகளை பதிவுசெய்ய முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சியில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

மிகைப்படுத்தப்பட்ட வசனங்கள், வாயில் நுழையாத மருத்துவப்பெயர்கள், ஆபாச வன்முறை, இரட்டை அர்த்த மொழிகள், என்று எதுவும் இல்லாமல் படம்பிடித்திருக்கிறார். பெரியதாக ஒரு கதை அம்சம் இல்லை என்றாலும் இந்த ஒரு சின்ன கதையையும் இவ்வளவு அழகாக பதிவு செய்ய முடியும் என்று உணர்த்தியிருக்கிறார்.

இளவரசு தனது வழக்கமான கேலி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கீதா சோகத்தை நன்றாகப் பரிமாறியிருக்கிறார். சித்தாரா மற்றும் கிட்டி அவரவர் பாத்திரத்தில் கச்சிதம்.

நாயகனைத் தவிர மற்ற அனைவரும் தெரிந்த நடிகர்கள் என்றாலும் இந்த திரைப்படம் வெற்றிஆகத காரணம் இந்த ஆதிக்க வரம்புதன். தயாரிப்பாளரும் விளம்பரத்தை பலப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் இந்த ஆதிக்க வரம்பிற்குள் இது போன்ற சிறிய தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் திரைப்படத்தை வெளியிட திரையரங்கு கிடைப்பதே பெரிய சிரமம். இந்த பொங்கலுக்கு வெளிவரும் தல தளபதி படங்கள் கூட மதுரை, திருச்சி, போன்ற நகரங்களின் பெரும்பாலான திரையரங்கங்களை ஆக்கிரமித்துக்கொண்டு சிறு படங்களை வளர விடாமல் தடுக்கின்றனர்.

தானும் வளர்ந்து மற்றவர்களையும் வளர வைத்து வளருவது தன் உண்மையான வளர்ச்சி என்பதை அவர்கள் எப்போது உணருவார்களோ???

இத்தனைக்கும் நான் மேல எழுதி உள்ளது சென்ற வருடம் வெளி வந்த “மதாப்பூ” என்ற திரைப்படத்தைப் பற்றித்தான். அப்படி ஒரு படம் வெளிவந்ததே நம்மில் பலருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்.

இப்படி ஒரு படத்தில் மட்டும் ஒரு நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என்று பலரை தொலைத்திருக்கிறது இந்த திரைத்துறை. இது போன்று எத்தனை கலைஞர்கல் வருடாவருடம் காணமல் போகிறார்களோ???

நம்மைப் போன்ற ரசிகர்களும் பல நல்ல திரைப்படங்களை காணும் அதிர்ஷ்டத்தைத் தவறவிடுகிறோம்!!!!

பிரம்மாண்ட குரல் தேடலில் வெட்கக்கேடு

இந்த வார ஆனந்த விகடன் இதழில் சென்ற வருடத்தின் சிறந்தவர்களுக்கும் சிறந்தவைகளுக்கும் விகடன் விருதுகள் அறிவிக்கப்பட்டது சினிமா விருதுகளும் அடங்கும். அந்த வரிசையில் 2013இன்  சிறந்த பின்னணிப்  பாடகர் விருது ஹரிஹரசுதன் என்ற ஒரு பாடகருக்கு வழங்கப்பட்டது.

அவர் சென்ற வருடத்தின் அதிக வசூல் செய்த திரைப்படமான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற திரைப்படத்தில்  “ஊதா கலரு ரிப்பன்” எனத் துவங்கும் பாடலைப் பாடியதற்காக இந்த விருதை வாங்குகிறார்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் காலத்து குரலில் அவர் அந்த பாடலை மிக அழகாகப்  பாடியிருப்பார். அந்த பாடல் சென்ற வருடத்தின் வெற்றிப் பாடல்களில் ஒன்று. பல இளைஞர்கள் அந்தப் பாடலைத் தங்கள் கைபேசியின் அழைப்புமணியாக வைத்திருந்தனர். அந்தப் பாடலின் முழு வெற்றிக்குக் காரணம் அவருடைய அந்த மாறுபட்ட குரல்தான் என்பது நாடறிந்த உண்மை.

இக்கருத்தையே அந்த வார இதழும் கூறியிருந்தது. இது அவர் பாடிய முதல் திரையிசைப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடகர் ஒரு பிரபல தொலைகாட்சி நிகழிச்சி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்னர் பங்குபெற்றார். தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல் என்று குறிப்பிடப்பெறும் அந்த நிகழ்ச்சியில் அவர் சிறந்த 15 பாடகர் வரிசையில் கூட இடம் பெறவில்லை. அதற்கு முன்னரே அவர் அதில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதற்கு அந்த நடுவர்கள் கூறிய காரணம்:-

  உங்கள் குரலில் பெரிய ஈர்ப்புச் சக்தி இல்லை. இந்த குரலை வைத்து பெரியதாக சாதிக்க முடியாது.

என்பது போன்ற கருத்துக்களை அவர்கள் கூறினார்.

இந்த இடத்தில இசையமைப்பாளர் இமானுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். அவர்தான் இவருக்கு இந்த வாய்ப்பை அளித்தார்.

 தமிழகத்தின் குரல் தேடல் என்ற பெயரில் மலையாள, கன்னட, ஆந்திர மற்றும் வடஇந்திய போட்டியாளர்களைப் பாட வைத்து ஹரிஹரசுதன் போன்ற பல தமிழ்ப் பாடகர்களின் திறமையைத் தரம் தாழ்த்தும் பணியில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கும் இந்தக் குரல் தேடலில் வெளிநாட்டு வாழ் தமிழர்களும் பங்குபெறுகிறார்கள் என்பது இன்னும் பெரிய ஒரு கேவலம்.

தன் தொலைக்காட்சியின் விளம்பரத்தைப் பெரிதுபடுத்த ஏன் இப்படி ஒரு செயலில் இப்படி ஒரு பெயரில் தமிழர்களின் மானத்தைக் கெடுக்கவேண்டும்.

இதை நேயர்களான நாம்தான் உணர வேண்டும்…..

இது தமிழனுக்கே ஒரு வெட்கக்கேடு…

உண்மையை உணருவோம்…

இராமாயணத்தின் பின்னணி தான் என்ன???

இந்த கட்டுரை தமிழ் தேசிய தமிழர் கண்ணோட்டம் என்ற மாத இதழின் அக்டோபர் 2013 இதழில் இடம் பெற்ற ஒரு தொடரில் இருந்து உருவானது….

  மகாபாரதத்திற்குப் பிறகு உலகின் மிக பழமையான புராணமாகக் கருதப்படுவது இராமாயணம். அது வடமொழியில்(சமஸ்கிருதம்) வான்மீகி முனிவரால் பாடப்பெற்றது. அதை பல்வேறு இந்திய அக்கால புலவர்கள்  அவரவர் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். அதில் ஒன்று தான் கம்பராமாயணம். அது ஒரு புறம் இருக்கட்டும்.

  அப்படிப்பட்ட இராமாயணம் உண்மையாக நடந்த நிகழ்வா? அல்லது கற்பனை கதையா? என்று இன்றும்  பலதரப்பட்ட உலக ஆய்வுகள் நடந்தேரிக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட சில ஆய்வுகளை பற்றி தொகுத்து ஒரு தொடரை அந்த மாத இதழில் இயற்றி இருக்கிறார் வழக்கறிஞர் வே. சிதம்பரம்.

 அவர் கூறுவதாவது,

  History of India Vol.Iஇல் பக்கம் 519இல் பேரா. சுப்பிரமணியன், இராமாயணம் ஒரு தத்துவ பொருள் கூறும் நூலும் இல்லை, வரலாறும் இல்லை. அது வெறும் ஒரு புராணம் தான். அது நடந்த கதை இல்லை.

 பேரா. பாஷம் கூறுவது என்னவென்றால் இராமன் ஒரு ஆர்யன். அவன் கோசலை நாட்டு இளவரசன். ஆனால் அவன் ஒரு கடவுளோ அல்லது அவதாரமோ கிடையாது. அவனை பற்றி வேறு குறிப்புகள் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் வெறும் சிற்றரசர்களாக இருந்திருக்க வேண்டும். அதை பிற்காலத்தில் விரிவுபடுத்தி கிருத்துவ ஆண்டின் தொடக்கத்தில் இராமாயணமாக இயற்றபட்டிருக்க வேண்டும். அதிலும் அவன் கோசலை மன்னனா அல்லது காசி மன்னனா என்று கூட ஒரு குழப்பம் இருக்கிறது.

  வான்மீகி இராமாயணத்தை இயற்றுவதற்கு முன்பு அது ஜாதக கதைகள் என்ற பெயரில் தன இருந்தது. வான்மீகி அதை காப்பியமாக மாற்றி எழுதினார். அதில் இருப்பதாவது,

  தசரதன் வாரணாசி அரசன். இராமன், லக்ஷ்மன், சீதை ஆகியோர் அவனுடைய முதல் மனைவியின் பிள்ளைகள். அதாவது இராமனும் சீதையும் அண்ணன் தங்கை என்று கூறுகிறது. பரதன் அவர்களுடைய மாற்றாந்தாயின் மகன். மாற்றாந்தாயின் சதி திட்டத்தில் இருந்து இவர்கள் மூவரையும் காப்பாற்ற தசரதன் அவரகளை இமயமலைக்கு நாடுகடத்துகிறான்.  நாடுகடத்தப்படுவது 14 ஆண்டுகள் அல்ல, 12 ஆண்டுகளே.  நாடு திரும்பிய பின்னர், இராமன் தன் தங்கை சீதையையே திருமணம் செய்துகொள்கிறான். அதில் சீதை கடதபட்டதாகவோ, இராமன் பாலம் கட்டியதாகவோ, இலங்கை என்ற தீவு பற்றியோ எந்த குறிப்பும் இல்லை.

 வான்மீகி தனக்கு முன் வழங்கி வந்த இராமாயணத்தை தன் கற்பனை திறத்தால் மாற்றி எழுதினார் அன்று அவர் கூறுகிறார்.

   இது போன்று பல தகவல்களை அவர் எழுதியுள்ளார். அதை அடுத்த கட்டுரையில் கூறுகிறேன்.

அன்புடன்,

சந்தோஷ் மாதேவன்….

Calling Daddy

 I, being a Tamil, speak in Tamil and I’m deeply interested in writing and reading Tamil. But from my child hood I’ve the habit of calling my father as daddy in English than calling him Appa in Tamil.

 Tamil being my mother tongue and I being the son of a man who taught me Tamil from the time I’ve been in my mother’s womb, I’m not ready to call him “Appa” rather than I feel satisfied calling him “Daddy”.

 This doesn’t seem to be a serious issue, but it is. Because, not only me, many of us. We are losing the shades of our mother tongue and we don’t ever mind to care about it. Not only we Tamils, it’s about all of India. Every language of our country is facing this problem.

 Let me not bother about the rest of India. But what it is about my mother tongue? And if I take an oath of calling him “Appa”, then it’s a shame on me. Is that a kind of a New Year resolution of calling your parent in your own mother tongue. I really need to change myself in this serious issue.

 Let me join with my kind of people and we shall try to change ourselves.

Amma, Appa, Anna, Akka, Mama, Athai, Thatha, Paati sound better than calling them Daddy, Mom, Bro, Sis, etc.